பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் - தீபாவளியை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
போக்குவரத்துத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.;
சென்னை,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, ஓட்டுநர்கள் பேருந்துகளை மிகுந்த கவனத்துடன், வேக வரம்புக்கு கட்டுப்பட்டு, கவன சிதறல்கள் இல்லாமல் இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.