ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு படுகர் இன மக்களின் உடை அணிவிப்பு

நீலகிரியில் நடைபெற்ற விழாவில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது.

Update: 2022-09-22 10:19 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது. தேயிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோத்தகிரியில் நடைபெற்றது.

இதில், 160 சிறு தேயிலை விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள், தேயிலை அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை மானியத்தில் வழங்கப்பட்டன. மேலும், நடப்பு ஆண்டில் 778 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்