விளாத்திகுளத்தில் தி.மு.க.வினருக்கு திராவிட மாடல் பயிற்சி
விளாத்திகுளத்தில் தி.மு.க.வினருக்கு நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க மகளிரணி மற்றும் மாணவரணிக்கான திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம், விளாத்திகுளம் தனியார் மண்டபத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். தி.மு.க. கொள்கைகள் மற்றும் பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோரின் சாதனைகளையும், சாதி, மத வேறுபாடுகளை களைந்ததில் இவர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து மகளிரணி மற்றும் மாணவரணியை சேர்ந்தவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடையை கூறியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.