நாகர்கோவிலில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-09 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும், மாணவர் சேர்க்கைக்கு தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக கூறியும், அதனை கண்டித்தும் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர் நல்லபெருமாள் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். காப்பாளர் பிரான்சிஸ், பகுத்தறிவு கழகத் தலைவர் சிவதாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். மாநகர செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்