திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தூய்மை பணியாளர்களுக்கு உடை மற்றும் ஓய்வு அறை அமைத்து கொடுக்க வேண்டும். தூய்மை பணிக்கு பணிநியமன ஆணை பெற்று வந்து பணி செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை நிபந்தனையின்றி நிரந்தரப்படுத்த வேண்டும். ராணுவம் மற்றும் காவல் துறைக்கு உள்ளது போன்று தூய்மை பணியாளர்களுக்கும் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பல்பொருள் அங்காடி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.