திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
பாளையங்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாறு குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., மாநில சுயாட்சி குறித்து சூரிய கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியின் போது இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, கலைஞர் தமிழ் பேரவை தென் மண்டல தலைவர் மைக்கேல் ராஜேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை என்ற கா.சு.பிள்ளையின் பிறந்தநாள் விழா நேற்று நெல்லையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவு துணில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.