திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

Update: 2023-06-09 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம், அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி, துரோபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி ஆகியன நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மஞ்சள் ஆடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்களுடன் திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து 7.25 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட 188 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

விழாவில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்