ரூ.2.6 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

ரூ.2.6 கோடி மதிப்பில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Update: 2022-05-26 18:04 GMT

கறம்பக்குடி:

கறம்பக்குடி ஒன்றியத்தில் 21 காவிரி பாசன வாய்க்கால்கள் ரூ.2.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாப்பாப்பட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் பெரம்புக்குளம் பாசன கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்குவதற்காக கடந்த 24-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் வகையில், பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 2.30 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு பாசன வாய்க்கால் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 3.60 கிலோ மீட்டர் நீளமுள்ள இரு பாசன வாய்க்கால்கள் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டிலும், கறம்பக்குடி ஒன்றியத்தில் 37.90 கிலோ மீட்டர் நீளமுள்ள 21 பாசன வாய்க்கால்கள் ரூ.2.6 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 43.80 கிலோ மீட்டர் நீளமுள்ள 24 பாசன வாய்க்கால்களில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ஜுன் மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு பாசனத்திற்கான தண்ணீர் செல்வதை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்