அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வாருகால்கள் தூய்மைப்படுத்தும் பணி

அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வாருகால்கள் தூய்மைப்படுத்தும் பணி

Update: 2022-06-04 18:25 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ெரயில்வே பீடர் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாருகால்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறைகளில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அஜீஸ் நகரில் நகராட்சி பள்ளி மற்றும் நகராட்சி பூங்கா சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்