வாய்க்கால்களை தூர்வாரும் பணி

ஆக்கூர் ஊராட்சியில் மழைநீர் வடியாமல் பாதிப்பை ஏற்படுத்திய வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்தது.

Update: 2022-12-02 18:45 GMT

பொறையாறு:

ஆக்கூர் ஊராட்சியில் மழைநீர் வடியாமல் பாதிப்பை ஏற்படுத்திய வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்தது.

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி கன மழை பெய்தது. பல்வேறு இடங்களில் ஆறுகள், வடிகால் வாய்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

தரங்கம்பாடி தாலுகாவில் தலச்சங்காடு, தலையுடையவர்கோவில் பத்து, கருவி, ஆக்கூர், திருக்கடையூர், மாமாகுடி, காலமநல்லூர், கீழையூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. ஆக்கூர் ஊராட்சியில் உள்ள உடையார்கோவில்பத்து, கீழத்தெரு, தெற்கு தெரு மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.

தூர்வாரும் பணி

வடிகால் வாய்கால்களை தூர்வாராததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன் ஆகியோர் முயற்சியால் ஆக்கூர் ஊராட்சி சார்பில் காவிரி ஆறு, அம்மனாறு மூலம் 125 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெற்று வரும் திருவரங்கன்னி வாய்க்கால், ஆக்கூரான் வடிகால் வாய்க்கால், கருவேலி வாய்க்கால், வண்ணான் வாய்க்கால், ஓடை வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடந்தது. இந்த வாய்க்கால்கள் 4 கி. மீட்டர் தூரம் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்