கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-07 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகே சாலையையொட்டி நடைபாதை செல்கிறது. அந்த நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடி, தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்