டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்மேலாண்மை துறை தேசிய கருத்தரங்கு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை தேசிய கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை தேசிய கருத்தரங்கு நடந்தது.

தேசிய கருத்தரங்கு

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில், 'இளைஞர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் சமூக ஊடகங்களை தங்களது திறன்களை வளர்த்து கொள்ள பயன்படுத்துமாறு கூறினார். மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி வரவேற்று பேசினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், சமூக ஊடகங்களின் நன்மைகள், தீமைகள் பற்றியும், பல்வேறு தொழில் துறைகளில் சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

ஆய்வு கட்டுரைகள்

தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் 'இளைஞர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம்' என்ற தலைப்பில் எழுதிய 28 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூலை பேராசிரியர் ரவி, கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி ஆகியோர் வெளியிட்டனர்.

மாணவி முத்துலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

சங்கங்களின் நிறைவு விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பயாஸ், கணினி பொறியியல் துறையைச் சார்ந்த ஸ்கேன், ஐ.இ.(ஐ), மின், மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஈஸ் ஆகிய சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.

பயாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தீயில்லா சமையல், பிரைன் டெஸ்டர், படத்தொகுப்பு, உண்மை கண்டறிதல், ஸ்கேன் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேனர் வடிவமைப்பு, பேச்சு போட்டி, மார்க்கெட்டிங் போட்டி, தகுதி போட்டி, லோகோ வடிவமைப்பு போட்டி, ஐ.இ.(ஐ) சார்பில் நடத்தப்பட்ட டீகோடிங் போட்டி, சி-புரோகிராமிங், திறன் சோதனை போட்டி, பிரைன் டீசர், டெக்னிக்கல் கனெக்சன், டெக் ஐ.கியூ. போட்டி, ஈஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட குழுமுறை கலந்துரையாடல், திறனாய்வு போட்டி, தொழில்நுட்ப பொருள் விளக்க போட்டி, வினாடி-வினா போன்றவற்றில் வென்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார். விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்