இரட்டை ரெயில் பாதை பணி: 13 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
இரட்டை ரெயில் பாதை பணிக்காக 13 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.;
நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு யார்டு-நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரை உள்ள வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற உள்ளது. இதற்காக கீழ்கண்ட 13 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) 22, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளிலும், கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு ரெயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் மெமு ரெயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது.
கொச்சுவேளி-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ெ்ரயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது.
கொல்லம் சந்திப்பு-திருவனந்தபுரம் சென்டிரல் சிறப்பு ரெயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம்-நாகர்கோவில் சந்திப்பு ரெயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-கொச்சுவேளி சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கொச்சுவேளி-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரெயில் இன்று, நாளை, 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
கொல்லம் சந்திப்பு-ஆலப்புழா சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் ஆலப்புழா-கொல்லம் சந்திப்பு சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் நாகர்கோவில்-நெல்லை சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது.
இரட்டை ரெயில் பாதை பணிக்காக புனே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 25-ந்தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்துடனும், புனே-கன்னியாகுமரி ரெயில் இன்று, நாளை, 22, 23, 24-ந்தேதிகளில் கொச்சுவேளியுடனும் நிறுத்தப்படுகிறது.
கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று, நாளை, 22, 23, 24 மற்றும் 25-ந்தேதி கொச்சுவேளியுடன் நிறுத்தப்படும். புனலூர்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதி பாறசாலாவுடன் நிறுத்தப்படும்.
புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 24-ந்தேதி நெல்லையுடனும், ஹவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 25-ந் தேதி நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும். கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரெயில் இன்று, நாளை, 22-ந் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கன்னியாகுமரி-ஸ்ரீவைஷ்னோ தேவி கட்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் 22-ந்தேதி நாகர்கோவிலில் இ்ருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரெயில் 23, 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் கொச்சுவேளியில் இருந்து புறப்பட்டு செல்லும். கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் 22, 23, 24, 25, 26, 27-ந்தேதிகளில் கொச்சுவேளியில் இருந்து புறப்படும். கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரெயில் 23,24,25,26,27 ஆகிய தேதிகளில் பாறசாலாவில் இருந்து மாலை 6.18 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கன்னியாகுமரி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் 25-ந்தேதி நெல்லையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். நாகர்கோவில்-கோட்டயம் எக்ஸ்பிரஸ் 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 22, 23, 24, 25, 26, 27-ந்தேதிகளில் நெல்லை சந்திப்பில் இ்்ருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். திருவனந்தபுரம்-திருச்சி அதி விரைவு ரெயில் 22, 23, 24, 25, 26, 27-ந்தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் 23, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் இருந்து பைப்பாஸ் வழியாக இயக்கப்படும். இதே போல் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பைப்பாஸ் வழியாக நாகர்கோவில் டவுண் வழியாகவே செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 23, 24, 25, 26-ந்தேதிகளில் திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும். இதே போல் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
நாகர்கோவில் சந்திப்பு-ஷாலிமார் குருதேவ் எக்ஸ்பிரஸ் 24-ந்தேதி பகல் 2.45 மணிக்கு பதிலாக 1¼ மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.