"இது அவசர காலம்னு தெரியாதா?...அதிகாரிகளை ரெய்டு விட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

"இது அவசர காலம்னு தெரியாதா?.. ஏன் இன்னும் 70 பென்டிங்கா இருக்கு"உடனடியாகபணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Update: 2022-11-02 07:49 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இந்தநிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது "இது அவசர காலம்னு தெரியாதா?.. ஏன் இன்னும் 70 பென்டிங்கா இருக்கு" உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்