நாய் கடித்ததில் 6 பேர் காயம்

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நாய் கடித்ததில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.;

Update:2023-04-06 00:45 IST
நாய் கடித்ததில் 6 பேர் காயம்

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நாய் கடித்ததில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

6 பேர் காயம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் வயல்வெளியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடுகளை கடித்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை ராமநந்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த சரோஜா (வயது55) மற்றும் 3 பேரை நாய்கள் கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்த சரோஜா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரை நாய்கள் கடித்ததில் அவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

அப்புறப்படுத்த கோரிக்கை

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள நாய்கள் அச்சுறுத்தி வருவதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்கள் மற்றும் ஆடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்