டாக்டர்கள் தின விழா
பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தின விழா நடந்தது.;
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கிங்ஸ் ரோட்டரி சங்கம் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவ அலுவலர் அன்பழகன், டாக்டர்கள் சீனிவாசன், ராகேஷ், சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் அரசு ஆஸ்பத்திரியில் 200 உட்புற நோயாளிகளுக்கு ரொட்டி வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் சபாபதி நன்றி கூறினார்.