விடுமுறை நாட்களிலும் பணி செய்ய நிர்பந்திக்க கூடாதுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

விடுமுறை நாட்களிலும் பணி செய்ய நிர்பந்திக்க கூடாது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-09-10 18:45 GMT


கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை வனத்துறை இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வரதராஜன், பொருளாளர் ரஞ்சித்குமார் , துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார்.

விடுமுறை நாட்களில்...

கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை தங்கள் இயல்பு நிலை பணியிலிருந்து மாற்றுப் பணிக்கு ஈடுபடுத்தி வருவதை நிறுத்த வேண்டும், விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணி செய்ய நிர்பந்திக்க கூடாது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் நாகராஜன், தலைமை நிலை செயலாளர் வினோத் , மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன் மற்றும் சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன் மலை பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்