கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 25,665 பேர் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 25,665 பேர் எழுதினர். 4,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2022-07-24 18:47 GMT

குரூப்-4 தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்வு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 30,646 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் 110 மையங்களில் தேர்வு நடைபெற்றது.தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். மேலும் தேர்வு அறை நுழைவு சீட் (ஹால் டிக்கெட்) வைத்திருந்த தேர்வாளர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. கரூர் மாவட்டத்தில் 25,665 பேர் தேர்வினை எழுதினர்.

4,981 பேர் தேர்வு எழுத வரவில்லை

கரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 4,981 பேர் எழுத வரவில்லை. கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி குரூப் - 4 தேர்வு மையத்தை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.கண்காணிப்பு பணிக்காக துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் 6, பறக்கும்படை குழுக்கள் 15 மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 26 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவரை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்