திமுக இளைஞரணி மாநாடு - கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு

மாநாடு நடைபெறும் திடலில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Update: 2023-12-01 04:42 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் மாநாடு என்பதால் தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

மாநாடு நடைபெறும் திடலில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி, தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. இளைஞர் அணியினர் கலந்து கொள்ளும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சேலத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் காரணத்தால் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்த நிலையில் தற்போது கூட்டணிக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்