தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் டாக்டர் எ.வ.வே. கம்பன் தலைமையில் நடந்தது.;

Update:2023-07-22 23:21 IST

திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் டாக்டர் எ.வ.வே. கம்பன் தலைமையில் நடந்தது.

மணிப்பூர் சம்பவம்

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமைகள் குறித்து எடுத்து கூறிய அவர் தி.மு.க. மகளிர் அணியினர் தங்களின் எதிர்ப்பை வலிமையாக காட்டும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பான முறையில் அமைந்திட செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் விஜயலட்சுமி ரமேஷ், கற்பகம் சரவணன், உ.நித்தியா, நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட அணி அமைப்பாளர் டி.வி.எம்.நேரு உள்பட ஒன்றிய, நகர, மகளிர் அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்