மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலி

கே.வி.குப்பம் அருகே பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியானார்.;

Update:2022-11-28 22:37 IST

கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.மார்க்கபந்து(வயது 54). தி.மு.க. ஊராட்சி செயலாளர். இவரது மனைவி மாலா ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக மார்க்கபந்து நேற்று மாலை பேனர் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மார்க்கபந்துவின் மகன் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்