மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிது.;
சென்னை,
முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று 17-7-2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாறு கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.