தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் ஊராட்சி தவிட்டுப்பாளையத்தில் கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் கோவை சம்பத் கலந்துகொண்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கியும், இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.