'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

செந்துறை அருகே ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;

Update:2023-10-22 00:30 IST

ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் 'நீட்' தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக அனிதா நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்