தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
செங்கோட்டையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் தென்காசி தெற்கு மாவட்டம் செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலட்சுமி, நகர அவைத் தலைவர் காளி, துணை செயலாளர்கள் ஜோதிமணி, ராஜா, முத்துசரோஜா மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பீர்முகம்மது வரவேற்றார். நகர பொருளாளர் தில்லை நடராஜன் தொகுப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூது, எஸ்கே.முத்துப்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் கென்னடி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.