தி.மு.க. சார்பில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி, நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்குவதற்கு அனுப்பிய பொங்கல் பரிசு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நெமிலியில் நடந்தது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி கலந்துகொண்டு, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் காலண்டர் ஆகிய பரிசு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் புருஷோத்தமன், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், சங்கர், அரிக்கிருஷ்ணன், பெருமாள், அப்துல் நசீர், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.