சிங்கம்புணரி ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள்
சிங்கம்புணரி ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரிக்கு ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகளை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. அதன்படி சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவராக ராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணை ஒன்றிய செயலாளர்களாக சிவபுரி சேகர், கல்யாணசுந்தரம், ஷீலா தேவி, ஒன்றிய பொருளாளர் மனப்பட்டி பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதிகள் பிரான்மலை ஞானசேகரன், காளாப்பூர் செல்வகுமார், சின்னையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பனை சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.