தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-04-04 19:51 GMT

அம்பை:

அம்பையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், அம்பை நகர செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன் வரவேற்றார். அம்பை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தமயந்தி, ஒன்றிய செயலாளர்கள் அம்பை பரணி சேகர், சேரன்மாதேவி முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி என்ற பிரபு, விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டி, சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் மாஞ்சோலை மைக்கேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் சிவந்திபுரம் ஜெகன், வெள்ளாங்குழி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்