தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

போடியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.;

Update:2023-10-08 05:45 IST
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

போடியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதற்கு போடி நகர தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் ஆசிப்கான் வரவேற்றார். முகாமையொட்டி கட்சி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று இளைஞர்களை சந்தித்து அவர்களிடம் பேசி உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கினர். இந்த நிகழ்ச்சியில் போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், லோகேஸ்வரர், நகர இளைஞரணி நிர்வாகிகள் பரனீஸ்வரன், ஜெயக்குமார், தெய்வேந்திரன், செல்லதுரை, முத்து ராம்ஜி மற்றும் 33 வார்டுகளைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்