திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை. அறிவு இயக்கம்: மு.க ஸ்டாலின்

கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள். சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வேன் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-07-15 14:58 GMT

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது கருணாநிதிதான். அந்த நாளில் தான் இந்த நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தொடக்க பள்ளிகள், உயர் பள்ளிகளை அதிகப்படுத்தினார் கருணாநிதி. பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் சலுகைகளை கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள். சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வேன். அதற்கு சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் கலைஞர் பெயரில் திறக்கப்பட்டுள்ள நூலகமும் எடுத்துக்காட்டாக உள்ளது. நூலகத்தினால் தமிழகத்தில் அறிவு தீ பரவ போகிறது. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியவர் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதியே ஒரு நூலகம் தான். மாணவர் பருவத்தில்யே தமிழ் சமூகத்திற்காக போராடியவர் கருணாநிதி. திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை. அறிவு இயக்கம். தமிழ் இன்றும் தனித்து இயங்க காரணம், மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம். மாணவராக இருந்த காலத்திலேயே மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராட தொடங்கினார் கலைஞர். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் யாரும் கைவிடக்கூடாது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்