தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது தி.மு.க. அரசு - அண்ணாமலை குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி தி.மு.க. அரசு இருக்கிறது.

Update: 2024-02-15 12:20 GMT

சென்னை,

பா.ஜனதா கட்சியில் தமிழக தலைவர் அண்ணாலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவீதம் குறைந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை.

இன்று, டெல்டா விவசாயிகள் 40 சதவீதம் குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்