விபத்தில் தி.மு.க. தொண்டர் சாவு

விபத்தில் தி.மு.க. தொண்டர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-06-12 01:41 IST

மேலூர்

மேலூர் அருகே கோட்டனதம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகன் கார்த்திக்(வயது 21). சிவில் டிப்ளமோ படித்து முடித்தவர். இதே ஊரை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ்(21). இவர்கள் இருவரும் மேலூரில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப்பாசறை கூட்டத்துக்கு சென்றனர். அங்கு கூட்டம் முடிந்ததும் சூர்யபிரகாஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டிவர கார்த்திக் பின்னால் உட்கார்ந்து இருந்தார். மேலூருக்கு சென்றுவிட்டு அவர்கள் வீடு திரும்பி வந்துள்ளனர். ஆட்டுக்குளம் விலக்கு அருகே வந்தபோது நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே சென்றதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சூர்யபிரகாஷ் லேசான காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக்கை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மேலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து உயிரிழந்த கார்த்திக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதே விபத்தில் காயமடைந்த கோட்டநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரையும் அமைச்சர் மூர்த்தி சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்