சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் படுகாயம்

சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் படுகாயம் அடைந்தார்.;

Update:2022-06-04 00:20 IST

கந்தர்வகோட்டை மண்டலே நகரில் வசித்து வருபவர் சேட்டு (வயது 58). தி.மு.க. பிரமுகரான இவர் கடைவீதியில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கறம்பக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த சேட்டுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்