நெல்லையில் தி.மு.க. பொதுக்கூட்டம்

நெல்லையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-11 20:28 GMT

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தலைமை தாங்கினார். தச்சநல்லூர் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் உடன்குடி தனபால் பேசினார். இதில் கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ், மாநகர நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்