பாஜகவோடு நெருங்கி போக வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: அமைச்சர் ரகுபதி

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2024-08-25 01:41 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாணவிகள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் குற்றவாளியும், அவரது தந்தையும் இறந்தது வெவ்வேறு சம்பவம். 2 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்க்கட்சியினர் முடிச்சு போட்டு பாா்க்கிறார்கள். இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியையும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாணயம் வெளியீடு என்பது மத்திய அரசால் வெளியிட வேண்டியது. அதனால் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இதனால் பாஜகவோடு நெருங்கி போக வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது.

கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்பால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா? என பலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. அவர்களும் விரிசல் ஏற்பட வாய்ப்பை உருவாக்கமாட்டார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவதை திமுக இலக்காக நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்