கடையம்:
கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொட்டல்புதூரில் கலைஞரின் பேனா சாதித்தது என்ன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் சேட் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, நெல்லை முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, மாவட்ட சேர்மன் தமிழ் செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரஹீம், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சுடலைமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், சுந்தரி மாரியப்பன், தமிழரசி, புஷ்பராணி, ரம்யா ராம்குமார், சங்கர், ஆவுடைகோமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்சீலா பரமசிவன், ஜீனத் பர்வீன் யாகூப், ரூஹான் ஜன்னத் சதாம், மலர்மதி சங்கரபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகூர் மீராள், சக்தி சுப்பிரமணியன், முத்துமாரி, சந்திரன், லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை கழக செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.