தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி

சுரண்டையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிதி உதவி வழங்கினார்.;

Update:2023-10-14 00:15 IST

சுரண்டை:

சுரண்டை நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் சிவசண்முக ஞான லட்சுமி. இவரது கணவர் அழகுதுரை என்ற அய்யப்பன். இவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது சுரண்டையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், கவுன்சிலரின் கணவர் அழகுதுரையை சந்தித்து மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தனது சொந்த நிதியாக ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அப்போது கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அன்னபிரகாசம், ஜேம்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குறுங்காவனம் வெள்ளத்துரை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்