தி.மு.க. செயற்குழு கூட்டம்

செஞ்சியில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-12 18:45 GMT

செஞ்சி;

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார், பொருளாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வேலூரில் நடைபெறும் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்பது, டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டிற்கு 100 வாகனங்களில் சென்று பங்கேற்பது, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முகவர்கள் கூட்டங்கள் நடத்துவது, கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதற்கான பட்டியலை தயார் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ்ச்செல்வன், சேதுநாதன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானக்குழுஉறுப்பினர் செஞ்சி சிவா, செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணிஅமைப்பாளர் ஆனந்த், மாவட்ட விவசாய அஞ்சாஞ்சேரி கணேசன், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்ட விளையாட்டு அணி சந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி, மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரோமியன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், செஞ்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்