தி.மு.க. மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்,விருத்தாசலத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-07-24 18:45 GMT

கடலூர்

ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மகளிரணி சார்பில் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் லதா தலைமை தாங்கினார். துணை தலைவர் அமுதா பாண்டியன், அமைப்பாளர் அமுதராணி, துணை அமைப்பாளர்கள் மலர்விழி, சங்கீதா செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு பேசினார்.

இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிசா, பார்வதி, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், செந்தில்குமாரி இளந்திரையன், கவிதா ரகுராம், சுபாஷினி ராஜா, மாவட்ட தொண்டர் அணி தலைவர் குமாரி, துணை தலைவர் ஜெயசுதா, அமைப்பாளர் மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

விருத்தாசலம்

இதேபோன்று கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதா, விருத்தாசலம் நகர்மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி, மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளர் வெங்கடேசன், விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கனக. கோவிந்தசாமி, வேல்முருகன், கோட்டேரி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் வரவேற்றார்.

இதில் ஒன்றிய குழு தலைவர்கள் சுகுணா சங்கர், மலர் முருகன், வெண்ணிலா கோதண்டம், ஜெயந்தி ராதாகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் அணி, தி.மு.க. நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டு, பா.ஜ.க.வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்