சிவகிரியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்

சிவகிரியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

சிவகிரி:

தென்காசி மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அடுத்த மாதம் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகிரி ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன், சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சுமதி, பேரூர் அவைத்தலைவர் துரைராஜ், உதயநிதி ஸ்டாலின் மன்றம் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சி நிதியாக ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்