சிவகாசி மாநகராட்சி கூட்டத்துக்கு பணத்துடன் வந்து லஞ்ச புகார் கூறிய தி.மு.க. கவுன்சிலர்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்துக்கு பணத்துடன் வந்து தி.மு.க. கவுன்சிலர் லஞ்ச புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-29 18:40 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறினர்.

அப்ேபாது, தி.மு.க. கவுன்சிலர் இந்திராதேவி என்பவர் பணத்துடன் அதிகாரியை ேநாக்கி சென்றார்.

அப்போது அவர் கூறுகையில், எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 11 பேர் தங்களது வீடுகளுக்கு தீர்வை செலுத்த மாநகராட்சி அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். கடந்த 7 மாதமாக அந்த விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள். 11 விண்ணப்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் நான் கொண்டு வந்துள்ளேன். இதை கமிஷனரிடம் கொடுத்து பணிகளை முடித்து கொடுங்கள் என கேட்கலாம் என்று வந்தேன். தற்போது கமிஷனர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்த பணத்தை வழங்க உள்ளேன். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறுகையில், சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்