தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
கடையநல்லூரில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் நகரம், கடையநல்லூர் ஒன்றியம் தி.மு.க. பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் கடையநல்லூர் நகர மற்றும் ஒன்றிய பூத் முகவர்கள், நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், துணைத் தலைவர் ராசையா, யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.