தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல் 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ஞானவேல்(வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் கள்ளக்குறிச்சி நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று அண்ணாநகரில் உள்ள ஓட்டல் அருகில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை கண்டித்த ஞானவேலுவை அந்த கும்பல் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. இதில் காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாமானந்தல் கிராமத்தை சேர்ந்த குகன்ராஜ், பொரசக்குறிச்சி கணேசன், வேல்முருகன், அண்ணாநகர் அமரன் உள்ளிட்ட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.