அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-09-15 22:55 GMT

தி.மு.க.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது உருவப்படத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், சேலம் மாநகர தி.மு.க. செயலாளர் ரகுபதி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைகண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், உமாராணி, தனசேகரன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, ஏ.எஸ்.சரவணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், செல்வராஜ், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சரவணன், முருகன், சண்முகம், பாண்டியன், பாலு, மாரியப்பன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் அம்மாபேட்டை தினேஷ், ஜெய்சங்கர், வெங்கடலட்சுமி, மயில் வெங்கடேஷ், சாமிநாதன், கார்த்திக் உள்பட பலர் திரண்டு வந்து அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் சேலம் தமிழ்சங்கம் சார்பில் அதன் தலைவர் சீனி.துரைசாமி தலைமையில் செயலாளர் வரத.ஜெயக்குமார், பொருளாளர் சங்கரன் மற்றும் நிர்வாகிகள் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்