தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்

திருவாரூரில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடந்தது.

Update: 2023-02-11 18:45 GMT


திருவாரூரில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடந்தது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. அதன்படி மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா அறிவுரையின்படி, மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம். எல். ஏ. மேற்பார்வையில் திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் முகாம் நடந்தது. முகாமுக்கு மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளரும், திருவாரூர், நாகை மாவட்ட நேர்காணல் பொறுப்பாளருமான ரா.சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வாரை பிரகாஷ் முன்னிலை வகித்தார். முகாமில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்