வேளாங்கண்ணி:
கீழையூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூண்டியில் தனியார் கல்யாணமண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், இளம்பரதி, வேளாங்கண்ணி நகர பொறுப்பாளர் மரியசார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வருகிற 25-ந்தேதி மாணவர்களுக்கு காலை உணவை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளைக்கு வருகிறார். அப்போது முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது, அதற்கு ஒன்றியத்தில் உள்ள கிளை செயலாளர்கள், திரளான கட்சி உறுப்பினர்கள் மற்றும் மகளிர்களை அழைத்து வருவது மற்றும் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.