தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-12-15 01:21 IST

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து சேரன்மாதேவியை அடுத்த கூனியூர் பஸ்நிறுத்தம் அருகே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், நகர செயலாளர்கள் சேரன்மாதேவி வக்கீல் பழனிகுமார், அம்பை அறிவழகன், சேரன்மாதேவி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழரசி ஐசக், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூர் யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரப்பாடி

பரப்பாடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மா.விஜயகுமார், சங்கரலிங்கம், நகர செயலாளர்கள் அசோக்குமார், மு.சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.கே.சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் மின்கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்கவில்லை. மேலும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க. அரசு கடைபிடித்து வருகிறது. மக்கள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த மின் கட்டணத்தையும், தற்போது திமுக ஆட்சியில் உள்ள மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொரு யூனிட்டுக்கும் 4 ரூபாயில் இருந்து 11 ரூபாய் வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே இந்த அரசு தமிழகத்தில் இருந்து அகற்றப்படக்கூடிய ஒரு அரசாக திகழ்கிறது' என்றார்.

முன்னீர்பள்ளம்-ராதாபுரம்

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் முன்னீர்பள்ளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், கே.ஜே.சி.ஜெரால்டு, ஒன்றிய செயலாளர் முத்துகுட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பாலரிச்சர்டு, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, ராஜன் எட்வர்ட்சிங், ராமச்சந்திரன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவடி-காவல்கிணறு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மாவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், வேலுச்சாமி, நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகன், பாபு, களக்காடு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவல்கிணறு பகுதியில் வள்ளியூர் அ.தி.மு.க. தெற்கு, வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலர் பால்துரை தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இடைகால்

பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடைகால் விலக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, மாணவரணி செயலாளர் தளபதிபிரேம்குமார், முக்கூடல் நகர செயலாளர் வில்சன் முன்னிலை வகித்தனர். இதில் முக்கூடலை சேர்ந்த சண்முகநாதன், ஆதிமூலம், மைலப்பபுரம் சேவியர் ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அரியநாயகிபுரம் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்