தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
மரக்காணம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
பிரம்மதேசம்
விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட மரக்காணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள அடசல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான தயாளன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் ஒப்பில்லாமணி கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.