கோவில்பட்டியில் தே.மு.தி.க. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தே.மு.தி.க. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர சபை அலுவலகம் முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுப்பையா சுரேஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி மெயின் ரோடு, புது ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்கம் செய்யும் போது இரண்டு புறமும் இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் நட்டி மின்விளக்குகளை எரியவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பழனி, நகர அவைத்தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நகரசபை ஆணையாளர் ராஜாராமிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.