தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலை வகித்தார். உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாகீர் உசேன் கோரிக்கைகள் குறித்து பேசினார். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பனை ஓலை விசிறிகள், மெழுகுவர்த்தி, அரிக்கேன் விளக்குகள் ஆகியவற்றை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.